அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் ஊடாக உளவு பார்க்கப்பட்டதாக முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளனர்
இந்நிலையிலேயே தனது தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக மம்தா பானர்ஜி, குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
தற்போது எந்த தொலைதொடர்பு சாதனமும் பாதுகாப்பானதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது வாட்ஸ் ஆப் செயலியை இடைமறிக்க முடியாதென இதுவரை காலமும் நினைத்திருந்தேன். ஆனால் அதனையும் தற்போது விட்டு வைக்கவில்லை என மம்தா பானர்ஜி கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் இதன் பின்னணியில் மத்திய அரசு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.