குறித்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய நேற்று (வியாழக்கிழமை) மதியம், குறித்த யுவதியின் சடலத்தை கண்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூண்டுலோயா – ஹதூனுவாவ, வட்டாந்தர பகுதியை சேர்ந்த சானிக்கா மதுஷானி ஏக்கநாயக்க (வயது – 18) என்ற யுவதியே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி கடந்த 27.11.2019 அன்று காலை முதல் காணாமல் போய் இருந்ததாகவும், இந்நிலையில் நேற்று 28.11.2019 மதியம் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் வைத்திய பரிசோதனை மேற்கொள்வதற்காக, சடலத்தை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா? என்பது தொடர்பாக பூண்டுலோயா பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்