பெரமுனவும் இரட்டை சகோதரர்கள் போன்றன என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரு கூட்டணிக்குள் தற்போது இணைந்துள்ளோம்.
நாங்கள் இரட்டை சகோதரர்களைப் போன்றவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. மேலும் நாங்கள் எதிர்க்கட்சியிலிருந்து இருந்துகொண்டே ஒரு கட்சியை உருவாக்கியுள்ளோம்.
எல்பிட்டிய பிரதேசத்தில் நாங்கள் சிறந்த வெற்றியை பெற்றிருந்தோம். அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் 71 சதவீத வாக்குகளைப் குறித்த தேர்தலில் பெற்றிருந்தன
எனவே நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் எமது பயணம் நிச்சயம் தோல்வியை தழுவாது” என குறிப்பிட்டுள்ளார்.