கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் குறித்த தேர்தல் பிரசார கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 1 மணியளவில் ஆரம்பமானது.
குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர் மனோகணேசன், கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் ஆகியோர் உரையாற்றினர்.
இதேவேளை, இன்று காலை சஜித் பிரேமதாச, அமைச்சர் ரிஷாட் பதியுதீன்ன உள்ளிட்ட குழுவினர் மன்னாரிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.