மோசடிக்காரர்களும் தரகர்களுமே இருக்கின்றனர் என ஜனாதிபதி சட்டத்தரணியும் தேசிய மக்கள் கட்சியின் செயலாளருமான சிறினாத் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த வேட்பாளர்களில் யார் வெற்றிபெற்றாலும் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை எனவும் அதனால் நாட்டை முன்னேற்றி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றால் மஹேஷ் சேனாநாயக்கவுடன் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் நடவடிக்கை காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், “பிரதான இரண்டு வேட்பாளர்களும் பாரியளவில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகின்றனர். கடந்த காலங்களிலும் இவ்வாறு பல வாக்குறுதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
அவற்றில் மிகக் குறைந்தளவான வாக்குறுதிகளே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்த நிலையே எதிர்காலத்திலும் ஏற்படும். அதனால் மக்கள் வாக்குறுதி அரசியலுக்கு ஏமாந்துவிடக் கூடாது.
அத்துடன் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரும் சாதாரண நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்களாகும். ஆனால் அவர்கள் இருவரும் இந்த தேர்லில் பல பில்லியன் ரூபாய்களை இதுவரை செலவழித்திருக்கின்றனர்.
இந்தளவு பணம் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர்களின் பரம்பரையில் வசதி படைத்தவர்கள் என்று தெரிவிப்பதற்கு யாரும் இல்லை. அப்படியாயின் இவர்களுக்கு பின்னால் உள்நாட்டு வெளிநாட்டு தரகர்கள் இருக்கின்றனர்.
இந்த தரகர்கள் இவர்களுக்கு செலவழிக்கப்போவதில்லை. வெற்றிபெற்றால் அவர்களின் வியாபாரங்களுக்கு இவர்கள் உதவவேண்டும். அவர்களின் நிபந்தனைக்கமையவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அந்த அரசியலே கடந்த காலங்களில் இருந்து இடம்பெற்று வருகின்றது.
அதனால் இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கே நாங்கள் ஜென்ரல் மஹேஷ் சேனாநாயக்கவை களமிறக்கி இருக்கின்றோம். இராணுவத்துக்கு தலைமை வகித்ததுபோல் நாட்டுக்கும் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கத் தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருகின்றன.
மஹேஷ் சேனாநாயக்கவுக்கு பின்னால் மோசடிக்காரர்களும் இல்லை. தரகர்களும் இல்லை. அதனால் மக்கள் தொடர்ந்தும் வாக்குறுதி அரசியலுக்கு ஏமாந்துவிடாமல் சிந்தித்து செயற்படுவதற்கான காலம் வந்திருக்கின்றது.
நாட்டை பொருளாதாரம் மற்றும் ஏனைய அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடையச் செய்ய பொருத்தமான தலைவராக மஹேஷ் சேனாநாயக்க திகழ்கின்றார். மக்கள் அவருடன் கைகோர்த்துக்கொள்ள முன்வரவேண்டும்” என்றார்.