தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க.தலைவர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.இதன்போதே விரைவில் வர உள்ள உள்ளூராட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
குறித்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளூராட்சித் தேர்தலிலும் தொடருமென குறிப்பிட்டார்
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மு.க ஸ்டாலின் உடனான சந்திப்பின் போது உள்ளூராட்சித் தேர்தல் குறித்து பேசவில்லை எனவும் கூறினார்.
அதே சமயம் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் தி.மு.க. தலைமையில் எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.