சிறு வயது முதலே இதை கவனத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டல் முதுமையில் எலும்பு தசைகள் பலவீனமடைந்து மூட்டு வலிகள் அதிகரிக்கச் செய்யும்.
தசைகளை வலுவாக்க உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும் அதை பாதுகாக்க உதவும் விட்டமின் D உடலுக்குக் கிடைத்தால்தான் அதில் பலன் உண்டு.
இல்லையெனில் அதில் எந்தவித பலனும் இல்லை என அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே உடற்பயிற்சியோடு விட்டமின் D சத்தையும் எடுத்துக்கொள்வது அவசியம் என்கிறது.
international journal Clinical Interventions வெளியிட்ட இந்த ஆய்வில் 4000 பேர் பங்கேற்றுள்ளனர். சிறு வயது முதலே விட்டமின் D சத்தில் கவனம் செலுத்தாவிட்டால் 60 வயதை எட்டும்போது தசைகளின் பலவீனம் மூன்று மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.