கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
காவிரி ஒழுங்காற்று குழு தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான நவீன்குமார் தலைமையில் குறித்த கூட்டம் டெல்லியில் நடைபெறுகின்றது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசுகளின் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் காவிரி ஒழுக்காற்று கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்கு முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தமிழகத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நதிநீர் அளவு உள்ளிட்டவை தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதனடிப்படையில் இந்த ஒழுங்காற்று கூட்டம் அடுத்த உத்தரவுகளை பிறப்பிக்கும் என கூறப்படுகின்றது.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.