(ஜெ.ஜெய்ஷிகன்)
மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்குடா கல்வி வலயத்தின் நிருவாகத்திற்னான பிரதிக் கல்விப்பனிப்பாளர் திருமதி.சி.கங்கேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி இ.சிறிநாத் கிழக்குப் பல்கலைக் கழக சிரேஸ்ட்ட விரிவுரையாளர் கலாநிதி ப.இளங்கோ விசேட விருந்தினர் சிரேஸ்ட்ட விரிவுரையாளர், ஏறாவூர்பற்று-02 கோட்டக்கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள், மணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
2018 ஆம் ஆண்டு கல்வி, இணைப் பாடவிதானம் , தமிழ் மொழிதினப் போட்டிகள் ஏனைய போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர் பாடசாலை அபிவிருத்திசங்கத்தின் செயலாளர் வரதராஜன் அவர்களும் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.