பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கொழும்பு துறைமுகத்திற்கு முதன்முறையாக நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின்போது, கிழக்கு கொள்கலன்கள் முனையம், ஜயபாலு கொள்கலன்கள் முனையம் ஆகியவற்றை அபிவிருத்திச் செய்ய வேண்டிய முறை தொடர்பாக அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.
இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது, இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கெப்டன் அதுல ஹேவாவித்தாரன உள்ளடங்கலாக துறைமுக அதிகார சபையின் பிரதான அதிகாரிகளும் அமைச்சருடன் இணைந்துக்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.