பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலி 02ஆம் வட்டாரப் பகுதியில் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள கள் விற்பனை நிலையத்தை அகற்ற கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கள் விற்பனை நிலைய வாசலை மறித்து இன்று (சனிக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குடியிருப்புக்கள் மத்தியில் கள் விற்பனை நிலையம் வேண்டாம் என்றும் இதனால் சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளதாகவும் பாடசாலை மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கள் வியாபாரம் என்ற போர்வையில் கஞ்சா, கசிப்பு போன்றவையும் விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் வீதியால் பெண்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் குறித்து ஏற்கனவே பல தடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இறுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்ததாக தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த பகுதிக்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கள் விற்பனை நிலையம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் அதன்பின்னரை் தாம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.