ஒருபோதும் தீவிரவாதம் தலைத்தூக்க இடமளிக்கப்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இறுதிப் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “எமது அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே பிரதான நோக்கமாக இருக்கும். தேசிய பாதுகாப்புக்காக அன்று நாம் மேற்கொண்டிருந்த அனைத்துக் கட்டமைப்புக்களையும் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவோம்.
இதற்காக இராணுவத்தினரின் மனநிலையை ஸ்திரப்படுத்தி, புலனாய்வுத் துறையை பலப்படுத்தி, மீண்டும் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குவோம்.
இலங்கையில் இனிமேல் எந்தக் காரணம் கொண்டும் தீவிரவாதம் தலைத்தூக்க நாம் அனுமதியளிக்கவே மாட்டோம். எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பையும் நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என்பதை இவ்வேளையில் நான் கூறிக்கொள்கிறேன்.
சட்டம்- நீதி நிலை நாட்டப்படக்கூடிய ஒரு அரசாங்கத்தை நாம் நிச்சயமாக ஸ்தாபிப்போம். இதற்கான ஒத்துழைப்புக்களை மக்கள் எமக்கு வழங்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.