பிரம்மாண்ட குடியிருப்பு தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
வொஷிங்டன் மாகாணத்தில் அமேசன் நிறுவனத்தினால் இந்த குடியிருப்புத் தொகுதி நிர்மாணிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் சுமார் 12 ஆயிரம் பேர் தங்கும் இடமின்றி தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு உதவும் நோக்கில் அமேசன் நிறுவனம் மேரிஸ் ப்ளேஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, சியாட்டல் நகரில் 8 அடுக்கு குடியிருப்பு தொகுதி ஒன்றை நிர்மாணித்து வருகிறது.
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு குறித்த குடியிருப்பு தொகுதி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதில், 30 குடும்பங்களுக்கான தனி அறைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கம், மருத்துவ வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்படவுள்ளன.
இதற்காக பயனாளர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப் போவதில்லை எனவும் அமேசன் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.