வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் செயற்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையப் போவதில்லை என்றும் கூறினார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் சி.சி.டி.வி காட்சிகள் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார்.
அத்தோடு தான் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், தனது இல்லத்திற்கு வந்து அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் வசந்த சேனநாயக்க கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் குழுவுக்கு எதிராக அவர் கூறிய கருத்துக்களை அடுத்து, வசந்த சேனநாயக்க கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மாதம் அறிவித்தது.
அத்தோடு கடந்த வருடம் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையின்போது வசந்த சேனநாயக்க பல தடவைகள் கட்சி தாவலில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.