அதன் தற்காலிக தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த கூட்டம் எதிர்வரும் நான்காம் திகதி இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்திற்கு பின் மத்திய அரசிற்கு எதிராக பத்து நாள் தேசிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில், பொருளாதார மந்தநிலை, விவசாயிகள் பிரச்சனை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை முன்னிறுத்தப்படவுள்ளன. இந்த போராட்டம் அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் டெல்லி மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலையும் மனதில் வைத்து நடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலங்களிலும் முக்கிய எதிர்கட்சி தலைவர்களின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களுடன் இந்த போராட்டம் முடிவுபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் நவம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் இடையே பல்வேறு விவகாரங்களில் ஒத்தக் கருத்தை வளர்க்கவும் இந்த போராட்டம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது