குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தூய்மையான காற்றுக்கான மருத்துவர் அமைப்பினர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னையின் 15 இடங்களில் இதுகுறித்து ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது வட சென்னையை போல் தென் சென்னையிலும் காற்றில் மாசு கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட பிற நகரங்களை போன்று அல்லாமல் சென்னையில் இப்போதே இதனை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தூய்மையான காற்றுக்கான மருத்துவர் அமைப்பினர் கோரியுள்ளனர்.
அத்துடன், காற்று மாசால் வடசென்னை பகுதிகளில் குழந்தைகளுக்கு சுவாச பிரச்னைகள் ஏற்பட்டுள்ளமையும் ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்களால் கண்டறிப்பட்டுள்ளது.
வாகனங்களின் அதிகரிப்பு, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை போன்றவை காற்றை மாசடையச் செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.