மாதம் 10 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக கட்டலோனியா சுதந்திரத்தை ஆதரிப்பவர்களின் போராட்டங்கள் வன்முறையாக மாறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயினில் தனிநாடு கோரி போராடிய கட்டலோனியா பிரிவினைவாத தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து, ஏறத்தாழ 3,50,000 மக்கள் பார்சிலோனாவில் வீதியில் இறங்கி போராடினர்.
கட்டலோனியா சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இவர்கள் அமைதியான ஒரு பேரணியையும் மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 பிரிவினைவாத தலைவர்களுக்கும், நீதிமன்ற விசாரணைகளை அடுத்து, ஒன்பது முதல் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் பிரிவினை கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
எனவே ஸ்பெயினில் பொதுத் தேர்தல் இடம்பெறுவதால் போராட்டக்காரர்கள் வாக்குசாவடிகளை குறிவைத்து வாய்முறைச்சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதனால் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.