பயன்பாடு மற்றும் மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக சஜித் பிரேமதாச, மகா சங்கத்தினருக்கு கடிதம் மூலம் விளக்கமளித்ததாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்று சிலரால் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க, சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 16 ஆம் பக்கத்தில் ஒற்றையாட்சி பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.
இதேவேளை மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பற்றி பரப்பப்படும் வதந்திகள் குறித்தும் அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டாமல் கையெழுத்திடப்பட மாட்டாது என்றும் மகா சங்கத்தினருக்கு விளக்கமளித்திருப்பதாக அவர் கூறினார்.
மேலும் அமெரிக்க பிரஜையான கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் நாட்டின் நிலவரம் எவ்வாறு அமையும் என்பதை சிந்தித்து மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.