கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்து அம்பாறை – நற்பிட்டிமுனையில் ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.றபீக் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நற்பிட்டிமுனை சந்தியில் பட்டாசு கொளுத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுதவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நற்பிட்டிமுனை ஆதரவாளர்கள் வீதியில் சென்றவர்களுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கினர்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அமோக வெற்றிபெற்று இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது