குறித்த தகவலை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையர் , ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 30-ஆம் திகதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு டிசம்பர் 7ம் திகதியும் 3ஆம் கட்ட வாக்குப் பதிவு டிசம்பர் 12ம் திகதியும் 4ஆம் கட்ட வாக்குப் பதிவு டிசம்பர் 16ம் திகதியும் நடைபெறும்.
டிசம்பர் 20ம் திகதி 5வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று டிசம்பர் 23ம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்றைய தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருகின்றன.
தேர்தல் அறிவிக்கை நவம்பர் 6ம் திகதி வெளியிடப்படும். நவம்பர் 13ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை நவம்பர் 14ஆம் திகதி நடைபெறும். டிசம்பர் 23ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இங்குள்ள, 13 மாவட்டங்களில் இடதுசாரி தீவிரவாதம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் காரணமாக இந்த மாவட்டங்களில் தேர்தலின்போது சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.