இடம்பெற்ற போராட்டத்தில் இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாலஸ்தீனியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஹெப்ரான் நகரத்திற்கு அருகிலுள்ள அல்-அரூப் அகதி முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 22 வயது இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் இஸ்ரேலிய இராணுவம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பாலஸ்தீனிய தலைவர் யாசர் அராபத்தின் மரணத்தின் 15 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் போராட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.