மாற்றியமைப்பதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கலாவெல பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “நாட்டில் போசாக்கான உணவை தயாரிப்பதற்கு விவசாயிகளுக்கு உரத்தை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் அவர்களுக்கான காப்புறுதி திட்டம், ஓய்வூதியத் திட்டம் என்பனவற்றையும் அறிமுக்கப்படுத்துவதற்கு நாம் முன்வந்துள்ளோம்.
சிறந்த நீர் முகாமைத்துவத்தை ஏற்படுத்தி விவசாயத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகிறோம்.
எம்முடன் போட்டியிடும் எதிர்த் தரப்பினருக்கு தமது கொள்கை பிரகனத்தை கொண்டு வெற்றியை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிந்து தற்போது போலி பிரசாரங்களை முன்னெடுகிறார்கள்.
அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக சிந்திக்காது செயற்பட்டனர் அதுவே அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. தவறான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்காக நான் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்தேன்.
அந்த வகையில் நடைமுறையில் செயற்படுத்தக்கூடிய திட்டங்களையே நான் முன்வைத்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.