தெரிவிக்கும் வகையில், நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை தவிர்க்குமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இழிவு படுத்தியதாக தி.மு.க. சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து தி.மு.க. சார்பில் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக அறிவிப்புகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப்பிரமாணம் எடுத்துவிட்டு, நாலாந்தரப் பேச்சாளரின் நடையைத் தழுவி, பாண்டியராஜன் பேசி இருப்பது, உண்மையில் தனக்கு வருத்தம் தரவில்லை என கூறியுள்ளார்.
எனவே, அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.