வெளிநாட்டுக்கு விற்றமைக்காக இந்த நாட்டு இராணுவத்திடம் மண்டியிட்டு அவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பாதுகாப்புத்துறையில் நடைபெற்ற பாரிய மோசடிகள் அனைத்தும் ராஜபக்ஷக்கள் காலத்தில் நடைபெற்றதாக சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவ தலைமையகத்திற்கு சொந்தமான காணி சீனாவிற்கு விற்கப்பட்டமை ஊடக தேசிய நிதி 5 பில்லியன் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டினை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் மறுக்க முடியுமா?
நல்லாட்சி அரசாங்கத்திலும் தேசிய நிதி மத்திய வங்கியின் பினைமுறி கொடுக்கல் வாங்கல் ஊடாக இடம் பெற்றுள்ளது என்பதை ஒருபோதும் மறுக்கவில்லை.
கடந்த அரசாங்கம் போல மூடி மறைக்கவும் இல்லை. அரசாங்கம் அரச காணிகளை சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்குவதாக எதிர் தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
கடந்த நாலரை வருட காலமாக ஒரு அங்குலக் காணியைக் கூட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கவில்லை. ஒப்பந்த அடிப்படையிலே காணிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன.
நாட்டு மக்கள் எதிர் தரப்பினரது போலியான பிரசாரத்திற்கு ஏமாற்றமடையாமல் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் சகாக்கள் கருத்துரைப்பது எவ்விதத்திலும் பொறுத்தமற்றது.
ஆகவே அவரே மறுப்புக்களை தெரிப்பதாயின் நேரடியாக விவாதத்தினை முன்னெடுக்க வேண்டும். ஆதாரங்களுக்கான ஆவணங்களை பகிரங்கப்படுத்த தயார்” என கூறினார்.