தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.
கல்முனையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் முகமாக சஜித் பிரேமதாசவிற்கு எங்களுடைய ஆதரவு தெரிவிப்பதற்கு முடிவெடுத்துள்ளோம்.
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிக்க தீர்மானம் எடுத்ததற்கான நோக்கம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மதவாதம், இனவாதம், ஆயுத கலாச்சாரம் என்பனவற்றை உருவாக்கினர். ஆகவேதான் சிறுபான்மை மக்களுக்கு சஜித் பிரேமதாசவின் ஆட்சியிலேயே விமோசனம் கிடைக்கும்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் நாங்கள் வடக்கு, கிழக்கு இணைப்பை வழியுறுத்துவதோடு, அதிகார பகிர்வையும் எதிர்பார்த்தே நாங்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம்.
எங்களது தொழிற்சங்கம் மற்றும் பிற அமைப்புக்கள் என்பன அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முழுக்காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆகும். 20 வருட அரசியலில் தமிழ் மக்கள் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும். கூட்டமைப்பின் தலைவராக வருகின்றவர் துடிப்பானவராக இருக்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.