திகதி மூன்று இளைஞர்களை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற இருவரை பீல் பிராந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் ஞாயிறுக்கிழமை கைதுசெய்யப்பட்ட பதின்ம வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார், பிராம்ப்டன் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தினர்.
அந்த இருவர் மீதும் கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் சம்பவ இடத்தில் இருக்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஒக்ரோபர் 26ஆம் திகதி எல்ஜின் ட்ரைவ் மற்றும் மக்லோக்லின் வீதிப் பகுதியில் உள்ள நடைபாதையில் சென்றுக்கொண்டிருந்த மூன்று பாதசாரிகள் மீது, ஒரு வெள்ளை ஹோண்டா பைலட் எஸ்யூவி (SUV) ரக வாகனம் மோதியது.
இதில் பிராம்ப்டனைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இருவர், உயிருக்கு ஆபத்தான காயங்களுடனும் மற்றொரு 17 வயதுடையவர் காயங்களுடனும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.