நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தமானையொட்டி உள்ள வங்கக்கடல் பகுதியில் கடந்த 6ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பின்னர் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் தென் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்ட மீனவர்கள் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல நேற்று முன்தினம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.