வரும் ஏப்ரலில் அடிக்கல் நாட்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், விசுவ இந்து பரிஷத்தும் தீவிரம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராம நவமி தினம் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அடிக்கல் நாட்ட இந்த இரு அமைப்புகளும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விசுவ இந்து பரிஷத் அமைப்பின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இராமஜென்ம பூமி நிவாஸ் என்ற அறக்கட்டளை சார்பில் இராமர் கோயில் கட்டுவதற்காக ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்ற நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது பற்றி பணிமனையின் பொறுப்பாளர் அன்னு பாய்சோம்புரா கூறுகையில், “இராமர் கோயிலுக்கான தூண்கள் செதுக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கினால் கோயில் அடித்தளம் அமைப்பதற்கான பணியை தொடங்க தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் இராமர் கோயில் கட்டலாம் என்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.