லைக்கா புரொடக்ஷனின் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் ருவிட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், யூடியூப் தளத்தில் ‘கத்தி’ படத்தின் மோஷன் போஸ்டருக்கான பார்வைகளும் அதிகரித்துள்ளது. ‘கத்தி’ என்ற பெயரும் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.