இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்திலிருந்து இரண்டு ஆண்கள் தப்பியோடியுள்ளதனை உறுதிப்படுத்தியுள்ள பொலிஸார், இவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஹார்டிங் அவனியூ மற்றும் ஜேன் வீதிப் பகுதியில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) முற்பகல் பத்து மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் போது 29 வயது ஆண் ஒருவர் பல தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் உயிர் பிழைத்துவிடுவார் என்று நம்புவதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸார், விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.