இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு உயர் பொலிஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லியில் சில நாட்களுக்கு முன்னர் ஹிசார் நீதிமன்றில் வழக்கறிஞர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதில் காயமுற்ற வழக்கறிஞருக்கு நிவாரண நிதி வழங்கி சமரசம் செய்யப்பட்டது. மேலும் பொலிஸாரை கண்டித்து சில நீதிமன்றங்கள் மூடப்பட்டன. அத்தோடு, வழக்கறிஞர்களும் தொடர் பணிப்புறக்கனிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக தமக்கு நியாயம் வழங்குமாறு வலியுறுத்தி டெல்லி பொலிஸ் தலைமை அலுவலகத்தில் பொலிஸார் கையில் பதாகைகளுடன், கருப்பு நிற பட்டி கட்டி போராட்டம் செய்தனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொலிஸார், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் நியாயம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
நாட்டில் முதன்முறையாக பொலிஸார் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையினால், இந்த போராட்டம், உயர் பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.