செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை(வியாழக்கிழமை) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
குறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாகவும் இதன்போது ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகின்றது