நடந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.
இது குறித்து ருவிற்றரில் கருத்து தெரிவித்துள்ள அவர், “இந்திய பொருளாதாரத்தின் மீது பேரழிவு தாக்குதல் நடத்தப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து, இலட்சக்கணக்கான சிறு தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பை பறித்த பண மதிப்பிழப்பு என்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் தங்களிடம் இருந்த மேற்படி நோட்டுகளை வங்கிகளில் வைப்பிலிட்டனர். இதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வைப்பு செய்தவர்கள் வருமான வரித்துறையினரால் விசாரணைகளை அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கை பெரும் தோல்வியடைந்து விட்டதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியமை குறிப்பிடத்தக்கது.