டொனால்ட் ட்ரம்ப்பிற்கு நியூயோர்க் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
டொனால்ட் ஜே ட்ரம்ப் என்ற அவரது தொண்டு நிறுவனத்துக்குக் கிடைக்கப்பெற்ற நிதியை தவறாக பயன்படுத்தியதாக ட்ரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 2016ஆம் ஆண்டு குறித்த நிதியை ட்ரம்ப் தனது அரசியல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்தநிலையிலேயே குறித்த வழக்கில் 2 மில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்துமாறு ட்ரம்ப்பிற்கு நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, டொனால்ட் ஜே ட்ரம்ப் என்ற குறித்த தொண்டு நிறுவனம் கடந்த வருடம் மூடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.