காற்று மாசு முற்றாக நீக்கியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்களா விரிகுடாவில் வீசிய காற்று மற்றும் இந்தியாவில் நிலவிய சீரற்ற காற்று நிலை இலங்கைக்கும் பரவியுள்ளதாகவும் இதுபற்றி எச்சரிக்கையுடன் செயற்படுதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் இனோக்கா சுரவீர கருத்து தெரிவிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், வளி மாசடைவதினால் பல்வேறு சுகாதார நெருக்கடிகள் தலைதூக்கியிருப்பதாகவும், நுரையீரல் நோய் மாத்திரமன்றி ஏனைய தொற்றா நோய்களும் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் உலக சனத்தொகையில் 12.6 மில்லியன் பேர் வளி மாசடைதல் தொடர்பான நெருக்கடியினால் உயிரிழக்கின்றனர். இதில் 38 இலட்சம் பேர் ஆசிய நாட்டவர்களாகும்.
எனவே, எதிர்காலம் பற்றி கவனம் செலுத்தி வளி மாசடைவதை கட்டுப்படுத்துவது காலத்தின் தேவையாகும். அதேநேரம் மனித செயற்பாடுகளும் வளி மாசடைவதற்கான பிரதான காரணமாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.