பயங்கரவாதத்தையும் தோற்கடிக்க தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே முடியுமென ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பயங்கரவாதம் அமைந்துள்ளது.
அடிப்படைவாதிகளால் எமது நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட அடிப்படைவாதம் காரணமாக தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
சிங்கள சமூகத்தில் ஏற்பட்ட அடிப்படைவாதம் காரணமாக, திகனவில், தர்காவில் மற்றும் அக்குரனையில் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டனர். இன்று எமது பாதுகாப்பின் அச்சுறுத்தல் அடைப்படைவாதிகள்.
அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்தை தோற்கடிப்பதன் மூலமே எமது நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும்
இத்தகைய பயங்கரவாதிகளையும் இனவாதிகளையும் முற்றாக ஒழிக்க எம்மால் மாத்திரமே நிச்சயம் முடியும் என்பதை உங்களுக்கு உறுதிப்பட கூறுகின்றேன்.
சஜித் வடக்கிற்கு செல்கிறார் சம்பந்தனின் கரத்தை பிடித்துக்கொண்டே இல்லாவிடின் அவரால் அங்கு செல்ல முடியாது.
இவ்வாறு பெரும்பாலான வேட்பாளர்கள் ஏனைய ஒருவரின் உதவியுடனே மக்களை சென்று சந்திக்கின்றனர்.
ஆனால் நாம் மாத்திரமே யாரையும் நாடாமல் நேரடியாக சென்று மக்களிடம் கலந்துரையாடலில் ஈடுபடும் நிலைமையில் உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.