போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கராப்பிடிய பிரதேசத்தில் தப்பிச் செல்ல முற்பட்ட ஹெரோயின் வியாபாரியை நோக்கி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே குறித்த ஹெரோயின் வியாபாரி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.