தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அங்கு பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்படடுள்ளது.
டெல்லியில் ஐந்தாவது நாளாக காற்றின் தரம் கடுமையான பிரிவில் நீடித்துள்ளது. இதன்காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளதால், பாடசாலை சிறுவர்களுக்கு முகக் கவசம் வழங்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது.
அந்தவகையில் ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தொடர்ந்து விவசாயக் கழிவுகளை எரிப்பதால், டெல்லியில் காற்று மாசு உயர்ந்து வருகிறது.
டெல்லியில் கடுமையான மாசுள்ள பகுதியாக வாஜிப்பூர் ஆனந்த் விஹார் அசோக் விஹார் விவேக் விஹார், பவானா ஆகிய பகுதிகளை அரசு அடையாளம் கண்டுள்ளது.
மாசுவின் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், முகக் கவசம் அணிந்து வெளியில் செல்லுமாறும், அதிகாலையிலும், இரவிலும் மாசுபடுத்திகள் வளிமண்டலத்தில் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நேரங்களில் திறந்தவெளியில் நடந்து செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக டெல்லி நகர் பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காணப்பட்டது. டெல்லியின் காற்று மாசு அளவு கடுமையாக நீடிப்பதால், டெல்லி – என்சிஆர் பகுதிகளில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லியில் எங்குமே பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் தடை விதித்துள்ளது. காற்று மாசு காரணமாக டெல்லி மக்கள் உடல் நலப் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனினும் தீபாவளியின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மாசுவின் காரணமாகவும், அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகளாலும் காற்று மாசு அதிகரித்தது. பல இடங்களிலும் காற்று மாசு கடுமையான பிரிவில் காணப்பட்டது. ஒட்டுமொத்த காற்றின் தரம் 582 புள்ளிகளாக உயர்ந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.