தொழிலாளிகளாக வைத்துக்கொள்ள விரும்பவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனவே நீங்களும் தேயிலைத் தோட்ட உரிமையாளராக வேண்டும் என மலையக மக்கள் முன்னால் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “மலையகத்தில் வாழ்கின்ற மக்களுக்கும் அடிப்படை தேவைகள் எதுவுமே இதுவரை பூர்த்தியாகவில்லை. முறையான முன்பள்ளி, பாடசாலை இல்லை. முறையான மண்டபங்கள் இல்லை. முறையான சுகாதார நிலையங்கள் இல்லை. முறையான பாடசாலைகள் இல்லை. இன்னும் பல தேசிய பாடசாலைகளை நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதனை நாங்கள் கட்டாயம் பெற்று கொடுப்போம்.
கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்திற்கான முறையான ஆசிரியர்கள் இல்லாமையினால் மலையகத்தில் உள்ள மாணவர்கள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள். கவலைப்பட வேண்டாம். இவை அனைத்தையும் நான் தீர்த்து வைப்பேன்.
எனது தந்தை ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது தோட்டத்தில் வாழும் சுமார் 12 இலட்சம் பேருக்கு ஒரே நாளில் பிரஜா உரிமை பெற்றுக்கொடுத்தார். அவரது மகனான நான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அடுத்த நாளே மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்குவேன்.
நான் மிகவும் அதிர்ஷ்டமானவன். காரணம் உங்கள் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய இதய பூர்வமானவர்கள் இன்று என்னுடன் இருக்கிறார்கள். அவர்களிடம் பொய், களவு, பண ஒப்பந்தங்கள் கிடையாது. அவர்கள் உங்களுக்ளு நல்லது செய்ய வேண்டும் என்றே நினைக்கின்றார்கள்.
நான் 16 ஆம் திகதி வெற்றி பெறும் போது 17ஆம் திகதியே ஜனாதிபதி செயலணி ஒன்றினை உருவாக்கி அதன் ஊடாக உங்களின் அனைத்து பிரச்சினைகளையும் எனது கையில் எடுத்து தீர்வை பெற்றுக் கொடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.