எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள் இன்று என சிவசேனா குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அயோத்தி வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு சிவசேனா அமைப்பின் தலைவர் உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் இராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “அயோத்தி வழக்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியாயமான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி.
இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள் இன்று. நான் வரும் 24ஆம் திகதி அயோத்திக்குச் செல்கிறேன். அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் சிவசேனா எப்போதுமே தீவிரம் காட்டி வருகிறது.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல வேண்டும். அவர்தான் இராமர் கோயிலுக்காக ரத யாத்திரை நடத்தினார். அவரிடம் ஆசியும் பெற வேண்டும்” என தெரிவித்தார்