இராணுவ முகாமை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கையின் படையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்த தகவல்களை இலங்கை இராணுவம், மாலியின் பாதுகாப்புத் தரப்பினருடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தியதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள மாலி நாட்டில் சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருந்ததோடு, ஏராளமானோர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.