பெண்ணொருவரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை பொலிஸார் வலைவிரித்து தேடி வருகின்றனர்.
இந்த மோதலால் குறித்த பெண் சுயநினைவு இழந்த நிலையில் தீவிர காயங்களுடன் ட்ரோமா (trauma) மருத்துவ நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கனடாவில், மிட்லான் மற்றும் ஸ்டீல்ஸ் அவனியூ வீதியில் வைத்து 40 அல்லது 50 வயது மதிக்கத்தக்க பெண் மீது நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை 6:30 அளவில், எஸ்யூவி வாகனமொன்றில் வேகமாக பயணித்த சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகளும், ரொறென்ரோ, பாராமெடிக் சர்வீசஸ் வந்த போது குறித்த பெண் வீதியின் மத்தியில் மயக்க நிலையில் இருந்தார்.
அந்தப் பெண் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும், பின்னர் மிகக் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்டதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பெண் தாக்கப்பட்ட இடத்தில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றுமொரு வாகனம் நின்றதா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்று பொலிஸ் ஆய்வாளர் அன்ரோனியோ மக்கியாஸ் தெரிவித்தார்.
பொலிஸ் விசாரணையில் மிட்லாண்ட் அவென்யூ ஸ்டீல்ஸ் மற்றும் பாஸ்மோர் வழித்தடங்களுக்கு இடையில் இரு வழிகளிலும் மூடப்பட்டன. இந்த சம்பவத்தை நேரில் கண்ட யாரேனும் பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.