குறித்த சடலம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
எனினும், குறித்த சடலம் குறித்த எவ்வித தகவலையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பிரிம்லி வீதியின் அடிவாரத்தில் உள்ள பூங்காவின், வாகன நிறுத்துமிடத்தில் எரிந்து கொண்டிருந்த வாகனத்திலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸாரால் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.
பிளஃபர்ஸ் பூங்கா, ஸ்கார்பரோ பிளஃப்ஸின் அடிவாரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது