இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சென்னைக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது ஆளுநர், இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும், வட.மாகாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு வட.மாகாண ஆளுநர் என்ற ரீதியில் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், இதன் ஒரு படியாகவே தி.மு.கவின் தலைவரான மு.க.ஸ்டாலினை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 41 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இந்தியாவின் சென்னைக்கான பயணிகள் விமான சேவையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வட.மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை முன்னேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் இதன்போது கூறியுள்ளார்.