எதிர்கொள்ள நேரிடும் என்பதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெயார் ட்ரை, ப்ரூக்ஸ், வுல்கன், மெடிசின் ஹெட், ஹை ரிவர் ஆகிய இடங்களுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு அல்பேர்ட்டாவில் இருந்து குறைந்த காற்றழுத்த நகர்வொன்று, மாகாணத்திற்குள் நகர்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) 10 முதல் 15 சென்ரி மீற்றர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால், நெடுஞ்சாலைகள், வீதிகள், நடைப்பாதைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் போன்ற மேற்பரப்புகளில் பனி குவிந்து இருக்குமெனவும், மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தின் இணையதளத்தில் வானிலை எச்சரிக்கைகளின் புதுப்பித்த பட்டியலை, மக்கள் அடிக்கடி அவதானித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.