உறுப்பினர் அனிதா ஆனந்த், பொதுச்சேவைகள் மற்றும் கொள்வனவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில், முதல் இந்து அமைச்சராக நியமிக்கப்பட்ட பெண்ணாக தனது பெயரை அவர் பதிவு செய்தார்.
ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியாக பணிபுரிந்த இவர், நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் நகரில் பிறந்தவர் ஆவார் எனினும், இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள வேலூரை குடும்பப் பின்னணியாகக் கொண்ட அனிதா ஆனந்த்தின் தந்தை மருத்துவர் சுந்தரம் விவேகானந்த ஐயர் ஆவார்.
நான்கு குழந்தைகளுக்கு தாயான ஆனந்த், ஓக்வில் பிராந்தியத்தில் உள்ள இந்தோ-கனடிய சமூகத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார், மேலும் கனேடிய இந்து நாகரிக அருங்காட்சியகத்தின் முந்தைய தலைவராகவும் இருந்தார்.
எயார் இன்டியா விமானம் 182 இல் பயங்கரவாத குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை ஆணையத்துக்கான ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார்.
புதிய ட்ரூடோ அரசாங்கத்திற்கான அமைச்சரவையில் புதிதாக வந்த ஏழு பேரில் அனிதா ஆனந்த்தும் ஒருவர் ஆவார்.