தவறி விழும் குழந்தைகளை காப்பாற்றுவதற்கு புதிய கருவியொன்று கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கருவியை மதுரையைச் சேர்ந்த அப்துக் ரசாக் என்பவர் கண்டுப்பிடித்துள்ளார்.
குடை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த கருவியானது மூடப்பட்ட குடையாக தலைகீழாக ஆள்துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டது. அதில் விழுந்து கிடந்த ஒரு பொம்மையை சேதம் ஏதுமின்றி வெளியே எடுக்கும் செயல்முறை விளக்கத்தை அவர் செய்து காட்டியுள்ளார்.
தலைகீழாக உள்ளே செலுத்தப்படும் இந்த மெல்லிய குடைபோன்ற கருவி, உள்ளே இருக்கும் பொம்மையை கடந்து சென்ற பின்னர் பொத்தானை இயக்கி குடையை விரிப்பதுபோல் விரிவடையச் செய்ததும் சிக்கியிருந்த பொம்மை விரிந்த குடையின் மீது அமர்ந்தவாறு வெளியே வந்தடைகிறது.
இந்த கண்டுபிடிப்பின் பயன் குறித்து தமிழக அரசின் முடிவு என்னவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழகத்தின் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் குழந்தை சுர்ஜித் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இவரின் இழப்பினைத் தொடர்ந்து இனி இவ்வாறான இழப்புகள் இடம்பெறாத வகையில் பல செயற்திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.