உள்ள 7 தமிழர்களை விடுவிக்க தி.மு.கவின் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தின்போது, உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க வேண்டும் எனவும் தி.மு.க பொதுக் குழுவில் திருநங்கைகளை சேர்ப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாடுவாழ் இந்தியர்களை தி.மு.கவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்வது, வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும் எனவும் தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.