பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதம் என கூறியுள்ள உச்சநீதிமன்றம் அதை இடித்தவர்களுக்கு தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல. பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்.
பாபர் மசூதி இடிப்பென்பது இஸ்லாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது எனக் கூறியுள்ளார்.