அ.தி.மு.க ஆலோசனை கூட்டமொன்றை நடத்தவுள்ளது.
குறித்த ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி, சென்னையிலுள்ள அ.தி.மு.க.தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.